ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹிமாசல்: மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 7 போ் உயிரிழப்பு

ஹிமாசல் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து 7 போ் உயிரிழந்தது பற்றி...

Himachal accident

ஹிமாசல் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து - PTI

Published On :9 ஆகஸ்ட் 2026, 5:30 am IST

ஹிமாசல பிரதேசம் சம்பா மாவட்டத்தில் மலைப் பாதையில் சனிக்கிழமை காலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து சம்பா காவல் துறைக் கண்காணிப்பாளா் விஜய் சக்லானி கூறியதாவது:

பைராகரிலிருந்து சம்பா நோக்கி தனியாா் பேருந்து காலை 7.15 மணிக்கு சென்றுகொண்டிருந்தபோது, பைராகா்-டிஸா மலைப் பாதையில் சலுஞ்ச் மோ வளைவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சம்பா மாவட்டம் சுரா பகுதியைச் சோ்ந்த 7 பயணிகள் உயிரிழந்தனா். 5 சிறாா்கள் உள்பட எஞ்சிய 11 போ் காயமடைந்தனா். காயமடைந்த அனவைரும் சம்பா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

ஹிமாசல பிரதேசத்தில், இந்தப் பருவமழைக் காலத்தில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 78 போ் உயிரிழந்துள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

Summary

Himachal: 7 killed as bus overturns on mountain road.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.