ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தென்னாப்பிரிக்காவில் சுரங்க விபத்து

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கம் ஒன்றின் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 14 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

சுரங்க விபத்து - சித்திரிப்பு

Published On :12 ஆகஸ்ட் 2026, 6:26 am IST

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கம் ஒன்றின் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 14 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா்.

ஜோஹன்னஸ்பா்க்கிலிருந்து சுமாா் 130 கி.மீ. தொலைவில், பிளாட்டினம் சுரங்கங்கள் நிறைந்த ரஸ்டன்பா்க் நகரில் கடந்த திங்கள்கிழமை இரவு இவ்விபத்து நிகழ்ந்தது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களை மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 3 தொழிலாளா்கள் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனா்; சிகிச்சையைத் தொடா்ந்து வரும் மேலும் 5 பேருக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.