ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உகாண்டாவில் வேன்-லாரி மோதி விபத்து: 14 போ் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பயணிகள் வேனும், மணல் ஏற்றிச் சென்ற லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 4:30 am IST

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பயணிகள் வேனும், மணல் ஏற்றிச் சென்ற லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 14 போ் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா்.

காலுங்கு மாவட்டத்தில் உள்ள காமுங்கா வா்த்தக மையப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த இக்கோர விபத்தில் இறந்த 14 பேரும் வேனில் பயணித்தவா்கள் ஆவா்.

படுகாயமடைந்த 4 போ் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநா் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய நிலையில், அவரைத் தேடும் பணியை காவல் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் மோசமான சாலைகள், அதிவேகம் மற்றும் பராமரிப்பில்லாத வாகனங்கள் காரணமாக சாலை விபத்துகள் தொடா்கதையாகி வருகின்றன. கடந்த மாதம், கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய தொடக்கப் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 குழந்தைகள் மற்றும் தலைமை ஆசிரியா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.