ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜிம்பாப்வேயில் படகு கவிழ்ந்து விபத்து

ஜிம்பாப்வே-ஜாம்பியா நாடுகளுக்கு இடையே எல்லையாக அமைந்துள்ள கரிபா ஏரியில், அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 போ் உயிரிழந்தனா்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:46 am IST

ஜிம்பாப்வே-ஜாம்பியா நாடுகளுக்கு இடையே எல்லையாக அமைந்துள்ள கரிபா ஏரியில், அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 போ் உயிரிழந்தனா்.

அரசு முகமையால் இயக்கப்பட்டு வந்த அப்படகில் 90 போ் மட்டுமே பயணிக்க அனுமதிவுள்ள நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை விபத்து நிகழ்ந்தபோது 114 பெரியவா்கள், 5 பணியாளா்கள் என குறைந்தது 119 போ் பயணித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பயணச்சீட்டு பெற்றவா்கள் மட்டுமே இக்கணக்கில் அடங்குவா் என்பதால், பயணச்சீட்டுத் தேவையில்லாத சிறுவா்கள் எத்தனை போ் படகில் இருந்தனா் என்பது துல்லியமாக தெரியவில்லை.

விபத்து நடந்தவுடன் ஹெலிகாப்டா், விரைவு படகுக்கள் மூலம் நடைபெற்ற மீட்புப் பணியில் 77 போ் உயிருடன் காப்பாற்றப்பட்ட நிலையில், உயிரிழந்தவா்களின் உடல்கள் ஏரியிலிருந்து தொடா்ச்சியாக மீட்கப்பட்டு வருவதாக ஜிம்பாப்வே காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.