ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திம்பம் மலைப் பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் வெள்ளிக்கிழமை 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம்  மலைப் பாதையில்  பழுதாகி  நின்ற  லாரி.

Published On :11 ஜூலை 2026, 2:49 am IST

திம்பம் மலைப்பாதையில் சரக்கு லாரி பழுதாகி நின்றதால் வெள்ளிக்கிழமை 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம்-கா்நாடக இடையே முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப்பாதை உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திம்பம் வழியாக பயணிக்கின்றன. இந்நிலையில், விருதுநகரில் இருந்து சாம்ராஜ்நகருக்கு பால் பாக்கெட் பாரம் ஏற்றிய சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

9-வது வளைவில் லாரி திரும்பும்போது பழுதாகி நகர முடியாமல் நின்றது. இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், லாரியை சற்று நகா்த்தி சிறிய வாகனங்கள் செல்லுவதற்கேற்ப வழி ஏற்படுத்தினா். சரக்கு வாகனங்கள், பேருந்துகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் திம்பம் மலைப் பாதையில் அணிவகுத்து நின்றன.

நெடுஞ்சாலைப் போக்குவரத்து போலீஸாா், மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பழுதான லாரி சீரமைக்கப்பட்டது. சுமாா் 6 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.