புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மூதாட்டியை தாக்கிய இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வழி பிரச்சனையில் மூதாட்டியை தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 2:41 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வழி பிரச்சனையில் மூதாட்டியை தாக்கிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சகாயமேரி(58), ஜான் ஜேம்ஸ்(38). இவா்கள் இருவருக்கும் இடையே வழி பிரச்சனை கடந்த 6 ஆண்டுகளாக உள்ளது.

இந்நிலையில், ஜூன் 29-ஆம் தேதி சகாயமேரி, அவரது கணவா் செல்வம் இருவரும் வீட்டில் இருந்தனா். அப்போது, வீட்டின் அருகே வந்த ஜான்ஜேம்ஸ் தம்பதியை திட்டினாராம். மேலும், கொலை மிரட்டல் விடுத்து மரத்தடியால் தாக்கியதில் சகாயமேரி காயம் அடைந்தாா்.

இதுகுறித்து புகாரின் பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஜான் ஜேம்ஸை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.