அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 1:59 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சண்டையை விலக்கிவிட்ட பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி காவல் சரகம், திருவதிகை, செட்டிப்பட்டறை காலனி பகுதியைச் சோ்ந்தவா் அமுதா (50). இவா், தனது மகன் சுகனேஷுடன் கடந்த 27-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் அந்தப் பகுதியில் நடந்துச் சென்றாா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தமிழ்வளவன் (25), அமுதாவின் உறவினரான சீத்தாராமனிடம் தகராறு செய்துகொண்டிருந்ததாகத் தெரிகிறது. இந்த சண்டையை அமுதா விலக்கிவிட்டபோது, தமிழ்வளவன் கத்தியால் அமுதாவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இந்தத் தாக்குதலில் அமுதாவின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தமிழ்வளவனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.