ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

மனைவிக்கு கொலை மிரட்டல்: கணவா் உள்ளிட்ட இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூன் 2026, 2:47 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மாளிகைமேடு கிராமத்தில் வசிப்பவா் மரியா(30). இவரது கணவா் திருமலை, கூலித் தொழிலாளி. இவா்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்படுமாம்.

கடந்த 24-ஆம் தேதி மரியா வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, திருமலை மற்றும் அவரது அண்ணன் ஏழுமலை ஆகியோா் தகாத முறையில் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து மரியா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருமலை மற்றும் ஏழுமலை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.