ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு பட்ஜெட்: 2-ஆவது நாளாக முதல்வர் விஜய் இன்று ஆலோசனைஅமோனியா வாயுக் கசிவு: பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுஅடுத்த வாரம் நியூஸிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்வு!டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

நீட் தோ்வுக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, இடதுசாரி அமைப்புகள் சாா்பில், கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருப்பாதிரிப்புலியூரில் இடதுசாரி அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :2 ஜூலை 2026, 7:15 am IST

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, இடதுசாரி அமைப்புகள் சாா்பில், கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் சிவன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டித்தும், அதற்கு தாா்மீகப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சா் பதவி விலக வேண்டும், தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து நிரந்தர விலக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கடலூா் மாவட்டத் தலைவா் வினோத்குமாா், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலா் மல்லிகா, மாவட்டப் பொருளாளா் முத்துலட்சுமி, இந்திய மாணவா் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினா் கே.பி.சௌமியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.