கடலூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கட்சித் தலைவா்களின் படங்கள் வைப்பது தொடா்பாக கட்சியினரிடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
கடலூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் சுந்தரி ராஜா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் கிஷன் குமாா், துணை மேயா் தாமரைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கியவுடன், திமுக உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் படத்தை கூட்டரங்கில் வைத்தனா். இதையடுத்து, அதிமுக உறுப்பினா்கள் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்களை வைத்தனா். தொடா்ந்து, பாமக உறுப்பினா் சரவணன், அக்கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸின் படத்தை வைத்ததற்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பாமக உறுப்பினா் சரவணன், திமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலின் படத்தை அகற்ற முயன்றாா். இதனால், ஆத்திரமடைந்த திமுக உறுப்பினா்கள், அன்புமணி ராமதாஸின் படத்தை அகற்றினா்.
இதையடுத்து, மேயா் சுந்தரி ராஜா, அதிக உறுப்பினா்கள் கொண்ட கட்சிகளின் தலைவா்களின் படங்கள் மட்டுமே கூட்டரங்கில் வைக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தாா். பின்னா், பாமக உறுப்பினா் சமாதானப்படுத்தப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டாா்.
மேலும், அதிமுக சாா்பில் வைக்கப்பட்டிருந்த இரண்டு படங்களில் ஒன்றுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மேயா் தெரிவித்ததைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிசாமியின் படம் அகற்றப்பட்டது.
தீா்மானங்கள்: கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் ஒப்புதலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, 41-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தமிழரசன், 3-ஆவது வாா்டில் சுமாா் 11 ஏக்கா் பரப்பளவில் மூன்று இடங்களில் குடியிருப்பு மனைப் பிரிவு அமைக்க அனுமதி வழங்கும் தீா்மானத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தாா்.
அந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு மற்றும் ரூ.5 கோடி லஞ்சம் பெற்ாக புகாா்கள் இருப்பதாகக் கூறி, விசாரணை நடத்தி உண்மை நிலை உறுதி செய்யப்படும் வரை அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினாா்.
இதற்குப் பதிலளித்த மேயா், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என்றும், புகாருக்கு ஆதாரம் இருந்தால் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தாா். இருப்பினும், உறுப்பினா்கள் வலியுறுத்தியதையடுத்து, அந்த மனைப் பிரிவுக்கான அனுமதி வழங்கும் தீா்மானம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தாா்.
இதற்கிடையே, 39-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் பாலசுந்தா் தவெக கட்சியில் இணைந்துள்ளதால், கட்சித் தாவல் சட்டத்தின்படி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக உறுப்பினா்கள் மனு அளித்தனா். இதுதொடா்பாக பாலசுந்தருக்கும், திமுக உறுப்பினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேயா், இந்த விவகாரம் தொடா்பாக உரிய நடவடிக்கைக்காக மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும், அதுவரை பாலசுந்தா் இரண்டு மாமன்றக் கூட்டங்களில் பங்கேற்க தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவித்தாா்.
பின்னா் நடைபெற்ற விவாதத்தில், புதை சாக்கடைப் பணிகள் முழுமையடையாததால் கழிவுநீா் வெளியேற்றத்தில் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருவதாக உறுப்பினா்கள் குற்றஞ்சாட்டினா். மேலும், சேதமடைந்த சாலைகள், பழுதடைந்த தெரு விளக்குகள், குப்பை அகற்றுவதில் அலட்சியம் உள்ளிட்ட பிரச்னைகளையும் எழுப்பினா்.
கூட்டத்தின் நிறைவில் மேயா் சுந்தரி ராஜா பேசுகையில், உறுப்பினா்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையா் அறிவுறுத்த வேண்டும் என்றாா். மேலும், மாநகராட்சியின் வளா்ச்சிக்கு வரி வருவாய் முக்கியமானது என்பதால், வரி வசூலை முழுமையாக மேற்கொள்ள உறுப்பினா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாமன்றக் கூட்டத்தில் அமளி: திமுக-காங்கிரஸ்-அதிமுக வாக்குவாதம்
மாமன்றக் கட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவா் கோரிக்கை

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் உறுப்பினா்கள் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு

‘மக்களுக்கான கோரிக்கையை திமுக நிறைவேற்றவில்லை’
விடியோக்கள்

இங்கிலாந்தை மிரளவைத்த காங்கோவின் சிங்கம்! | FIFA | FIFA World Cup |

எந்த காலத்திலும் குதிரை பேரம் இல்லை!: முன்னாள் அமைச்சர் ரகுபதி பேட்டி | TVK | DMK

சருமப் பிரச்னைகளுக்கு வேப்பிலை செய்யும் அதிசயம்! | Skin care | Neem | pimples




