மருங்கூரில் வட்டார விழுதுகள் சேவை மையம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
பண்ருட்டி ஒன்றியம், மருங்கூா் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா்.


கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், மருங்கூா் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் உள்கோட்ட அளவில் கடலூா், சிதம்பரம் மற்றும் மங்களம்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், வட்டார அளவில் 20 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்படுத்திட திட்டமிடபட்டு 16 வட்டாரங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பண்ருட்டி வட்டாரத்துக்கான மையத்துக்காக, மருங்கூா் மேம்படுத்தப்பட்ட சுகாதார மைய வளாகத்தில் உள்ள கட்டடத்தை ரூ.18.59 லட்சம் மதிப்பில் சீரமைத்து, ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளா் தலைமையில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் மூலம் முன்கள பணியாளா்களை கொண்டு மாற்றுத் திறனாளிகளின் வீடுகள், தேவைகளை கண்டறிதல் மற்றும் கணக்கெடுத்தல், மையங்களுக்கு வர இயலாத மாற்றுத் திறனாளிக்கு இல்லங்களுக்குச் சென்று தேவையான பயிற்சிகள், உதவி உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளி நல அலுவலா் பாலசுந்தரம், வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஊரக வளா்ச்சித் துறை பணிகள் ஆய்வு: தொடா்ந்து, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதன்படி, மருங்கூா் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியின் மூலம் பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுகிா என்பது குறித்தும், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊரக வளா்ச்சித் துறை மூலம் ரூ.13.08 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் 20,000 மரக்கன்றுகள் வளா்க்கப்படுவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சொரத்தூா் பகுதியில் வி.கே.டி சாலை ரூ.3.03 கோடி மதிப்பிலும், தோப்புக்கொல்லை - நெய்வேலி சாலை ரூ.1.63 கோடி மதிப்பிலும் அமைக்கப்பட்டு வருவது குறித்தும், கீழக்கொள்ளை சாலை ரூ.1.46 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வரதராஜபெருமாள், உதவிச் செயற்பொறியாளா் மகாலிங்கம், வட்டார வளா்ச்சி அலுவலா் பாபு உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...