டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முதலூரில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் திறப்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:24 pm

Syndication

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் 105 இடங்களில் விழுதுகள் என்ற பெயரில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் அமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற விழாவில், முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

அதன்படி, சாத்தான்குளம் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம் முதலூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திறக்கப்பட்டது. முதலூரில் நடைபெற்ற விழாவிற்கு, சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளா் சுடலை தலைமை வகித்தாா். மைய வட்டார ஒருங்கிணைப்பாளா் டாக்டா் லட்சுமி வரவேற்றாா். ஓய்வுபெற்ற ஆசிரியா் மகாபால்துரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா்.

இதில் சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய், சாத்தான்குளம் மத்திய ஒன்றிய திமுக செயலா், முதலூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் பொன். முருகேசன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவா் போ்சில் இத்திட்டம் குறித்து பேசினாா்.