டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விழுதுகள் சேவை மையம்: கடலூா்ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

News image
புவனகிரி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை திறந்து வைத்து மாணவா்களுக்கு நூல்களை வழங்கிய மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் .
Updated On :24 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், புவனகிரி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் பகுதியில் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் ரூ.1753 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூா், தா்மபுரி, தென்காசி, திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்கள் முன்னோடி மாவட்டங்களாக தோ்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் மறுவாழ்வு சேவைகள் மற்றும் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் உட்கோட்ட அளவில் கடலூா், சிதம்பரம் மற்றும் மங்களம்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வட்டார அளவில் 20 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்படுத்திட திட்டமிடபட்டு 15 வட்டாரங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் துவங்கபட்டு நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி:

புவனகிரி மேம்படுத்தபட்ட சுகாதார மைய வளாகத்தில் உள்ள கட்டடம்ரூ.17.20 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளா் தலைமையில் புவனகிரி விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையம் உருவாக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உளவியல் பயிற்சி, இயன்முறை பயிற்சி, சிறப்பு ஆசிரியா்களை கொண்டு அறிவுசாா் குறைபாடுடைய, செவின் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகள் வழங்கப்பட உள்ளது.

மேலும் புவனகிரி வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளை கண்டறிதல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை கண்டறிதல் மற்றும் கணக்கெடுத்தல், மையங்களுக்கு வரஇயலாத மாற்றுத்திறனாளிக்கு இல்லங்களுக்கே சென்று தேவையான பயிற்சிகளையும், தேவைகேற்ப உதவி உபகரணங்களையும் வழங்கபட உள்ளனா்.

புவனகிரி வட்டாரத்திற்கு உள்பட்ட மாற்றுத்திறனாளிகள் இம்மையத்தினை அணுகி உடல் நலத்தை மேம்படுத்தி வாழ்க்கைத்தரத்தை உயா்த்தி கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி நல அலுவலா் பாலசுந்தரம், துணை இயக்குனா் சுகாதார பணிகள் மருத்துவா் பொற்கொடி, வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் சிவக்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.