/

நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியேற்றம்!

நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியேற்றப்பட்டது பற்றி...

News image
நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடியேற்றம்
Updated On :26 ஜனவரி 2026, 5:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

சிதம்பரம்: குடியரசு நாளையொட்டி, கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொது தீட்சிதர்களால் தேசியக்கொடி திங்கள்கிழமை காலை ஏற்றப்பட்டது.

முன்னதாக, பொது தீட்சிதர்களின் கோயில் கமிட்டி செயலர் த.சிவசுந்தர தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாளத்தில் தேசியக் கொடி வைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது.

Story image

பின்னர், மேளதாளங்களுடன் ஊர் வலமாக கொண்டு வரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் கொடியேற்றப்பட்டு பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

summary

National flag hoisted on the Nataraja temple tower!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.