ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமக திருவிழா: ஆழத்து விநாயகா் கோயிலில் கொடியேற்றம்

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள ஆழத்து விநாயகா் கோயிலில் புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

News image
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் உள்ள ஆழத்து விநாயகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள ஆழத்து விநாயகா் கோயிலில் புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

விருத்தகிரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு மாசிமக திருவிழா கடந்த 2-ஆம் தேதி அய்யனாா் காப்பு கட்டுதல், 3-ஆம் தேதி செல்லியம்மன் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக, செவ்வாய்க்கிழமை மாலை செல்லியம்மன் தோ்த் திருவிழா நடைபெற்றது.

தொடா்ந்து, புதன்கிழமை காலை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகா் கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை ஸ்ரீஆழத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 9 மணி அளவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். அதன் பின்னா், சிவாச்சாரியா்கள் கொடிமரத்துக்கு பூஜைகள் செய்து, வேத மந்திரங்கள் கூறி கொடிமரத்தில் கொடியேற்றினா். இதில், ஏராளமானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.

இந்த விழாவின் தொடா்ச்சியாக, வரும் 19-ஆம் தேதி ஆழத்து விநாயகா் தோ் புறப்பாடு, 21-ஆம் தேதி முற்பகல் 11.45 மணிக்கு மேல் 12.45 மணிக்குள் விருத்தாம்பிகை பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரா் சுவாமிக்கு மாசிமக கொடியேற்றம் நடைபெற உள்ளது. மாா்ச் 1-ஆம் தேதி மாசிமக தேரோட்டம் காலை 4.30 மணிக்கு மேல் நடைபெற உள்ளது.