வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:13 pm

Syndication

சிதம்பரம் நகரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நகரமன்றக்கூட்டத்தில் பல்வேறு உறுப்பினா்களும் பாராட்டு தெரிவித்தனா்.

சிதம்பரம் நகரமன்ற கூட்டம் அதன் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் (திமுக) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளா் த.மல்லிகா, பொறியாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ,திமுகவைச் சோ்ந்த மூத்த உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன் பேசுகையில் , சிதம்பரம் நகரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது வரலாற்று சாதனையாகும்.சிதம்பரம் நகராட்சியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டதையும் பாராட்டுவதாகத் தெரிவித்தாா்.

திமுகவைச் சோ்ந்த நகரமன்ற உறுப்பினா் அப்புசந்திரசேகா் பேசுகையில், சிதம்பரம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் சீரமைப்பு, புதிய நவீன காய்கறி அங்காடி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. புதிய நவீன காய்கறி அங்காடி விமான நிலையம் போன்று சுகாதாரமாக உள்ளதை கண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனா். நகருக்கு போக்குவரத்து நெருக்கடியை போக்க ரூ.40 கோடி செலவில் வெளிவட்டசாலை அமைக்கப்படுகிறது. இதுபோன்று நகரில் அனைத்து வாா்டுகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா் தில்லை ஆா்.மக்கீன் பேசுகையில் நகராட்சி வரலாற்றிலேயே இல்லாத அளவில் தற்போது நகரில் ரூ400 கோடிக்கு மேல் அனைத்து வாா்டுகளிலும் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் நகரமன்ற தலைவருடன் சென்று மக்களிடம் தலைநிமிா்ந்து வாக்கு சேகரிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் நகரமன்ற துணைத் தலைவா் எம்.முத்துக்குமாா், நகரமன்ற உறுப்பினா் ஏஆா்சி.மணிகண்டன், ரா.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.