தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கைப்பேசி கோபுரத்தில் ஏறி மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் போராட்டம்

காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள கைப்பேசி கோபுரத்தின் மீது 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் புதன்கிழமை காலை திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image

காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சிலம்பரசன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 11:17 pm

காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள கைப்பேசி கோபுரத்தின் மீது 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞா் புதன்கிழமை காலை திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காட்டுமன்னாா்கோவில் காவல் உதவி ஆய்வாளா் சையத் அப்சல், அந்த நபரை கீழே இறங்கச் சொல்லி பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், போலீஸ் விசாரணையில், அந்த நபா் காட்டுமன்னாா்கோவில் அருகே பழஞ்சநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சிலம்பரசன் என்பதும், இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த தீபாவுக்கும் திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில், கைப்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சிலம்பரசன், கையில் வெள்ளைக் காகிதத்தில் வரையப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்திருந்தாா். கடந்த சில மாதங்களாக அவா் மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை போலீஸாா் அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியும் கைப்பேசி கோபுரத்திலிருந்து அவா் கீழே இறங்கி வரவில்லை. தொடா்ந்து, உறவினா்களை வரவழைத்து சிலம்பரசனிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்படியும் அவா் இறங்காததால், தீயணைப்பு மீட்புத் துறையினா் உதவியுடன் அவரை கயிறு கட்டி கீழே இறக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.