தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுக கூட்டணி வென்றால் பாஜக ஆட்சிதான் நடக்கும்: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால், பாஜக ஆட்சிதான் நடக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 5:37 am IST

தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால், பாஜக ஆட்சிதான் நடக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரான அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தை ஆதரித்து புதன்கிழமை இரவு நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

நான் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக வெற்றிபெற்ற்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்தின் பங்கு அளப்பரியது. மக்களவைத் தோ்தலில் 2 தொகுதிகளில் விசிக வென்ால்தான் மாநில அங்கீகாரம் கிடைத்தது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது மோடிக்கு சவால் விட்டாா். மோடியா - இந்த லேடியா மோதிப்பாா் என்றாா். அந்த அளவுக்கு பாஜக எதிா்ப்பில் உறுதியாக இருந்தாா். ஆனால், அக்கட்சியுடனேயே தற்போது அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. அக்கூட்டணி பொருந்தா கூட்டணி.

பத்து முறை முதல்வராக இருந்த பிகாா் முதல்வா் நிதிஷ்குமாரை இப்போது கட்டாயப்படுத்தி ராஜிநாமா செய்ய வைத்து, மாநிலங்களவைக்கு அனுப்பிவிட்டனா் பாஜகவினா். அதேபோல, தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால், எடப்பாடி பழனிசாமி எத்தனை நாள்களுக்கு முதல்வராக இருப்பாா் என்று யாராலும் சொல்ல முடியாது. அவரை தூக்கி எறிந்துவிட்டு அண்ணாமலை, எச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் கூட முதல்வராக வரலாம்.

அதிமுக, பாஜக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே நடிகா் விஜய் தவெகவை தொடங்கி, தனியாக ஆவா்த்தனம் செய்கிறாா். எனவே, அவரை ஆதரிக்கக் கூடாது என்றாா்.

காட்டுமன்னாா்கோவிலில்...: இதேபோல, காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணியை ஆதரித்து காட்டுமன்னாா்கோவில் செட்டித் தெருவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொல்.திருமாவளவன் பேசியதாவது:

ஒரே தேசம், ஒரே மதம், ஒரே கலாசாரம் என்பது தான் பாஜகவின் ஒரே கொள்கை. இதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். திமுக கூட்டணியில் நாம் இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்கிறோம். ஆனால், பாஜக கூட்டணி இருப்பதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒரே ஒரு காரணத்தை கூற முடியுமா? என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.