திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூட்டணி ஆட்சிக்கான யோசனையை முன்வைத்த முதல் இயக்கம் விசிக: திருமாவளவன்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வருவதற்கான யோசனையை முன்வைத்த முதல் இயக்கம் விசிகதான் என்று திருமாவளவன் பேச்சு

News image

செய்தியாளர்களுடன் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் - ஏஎன்ஐ

Updated On :22 மே 2026, 7:38 am IST

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வருவதற்கான யோசனையை முன்வைத்த முதல் இயக்கம் விசிகதான் என்று கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது, "எங்கள் 2 எம்எல்ஏ-க்களான வன்னி அரசு மற்றும் ஜோதிமணி ஆகியோரின் பெயர்களைப் பரிந்துரைக்க முடிவு செய்தோம். இன்று அமைச்சரவையின் ஒரு பகுதியாக நாங்கள் இருப்போம் என்ற அறிவிப்பை மட்டுமே வெளியிடுகிறோம்.

எங்கள் கட்சிக்குள் பெரும்பான்மை கருத்து என்னவென்றால், அமைச்சரவையில் விசிக இருக்க வேண்டும் என்பதுதான். கடந்த 8 ஆம் தேதியில் இணையவழிக் கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிலரைத் தவிர பெரும்பாலானோர், கட்சியைப் பிரதிநிதிப்படுத்துவ வேண்டும் என்றே கூறினர்.

இறுதியாக, தலைவர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.

தவெகவுக்கு நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முடிவு செய்தோம். அதன் அடிப்படையில்தான் ஆதரவுக் கடிதத்தை நாங்கள் வழங்கினோம்.

தமிழ்நாட்டுக்குள் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வருவதற்கான யோசனையை முன்வைத்த முதல் இயக்கம் விசிகதான்.

1999-ல் மூப்பனாருடன் நாங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபட்டபோது, நிர்வாகத்தில் பங்கேற்பதற்கும், அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் செய்வதற்கும் நாங்கள் முன்மொழிந்தோம். கூட்டணி ஆட்சி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை.

எனவே, தவெக விடுத்த அழைப்பையும், கட்சியின் நீண்டகால தொலைநோக்குப் பார்வையும் கருத்தில்கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என கருத்தைத்தான் கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் முன்வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

Summary

The first movement to advocate the idea of bringing a coalition form of governance to Tamil Nadu was the VCK, says Thol. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.