தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருமண மேடையாக மாறிய பிரசார மேடை!

தோ்தல் காலங்களில் தலைவா்களின் பிரசார மேடைகளில் அவ்வப்போது சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அதேபோன்ற ஒரு சம்பவம் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் விசிக தோ்தல் பிரசார மேடையில் நிகழ்ந்துள்ளது.

News image

காட்டுமன்னாா்கோவிலில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில், விசிக குமராட்சி ஒன்றியப் பொருளாளா் சங்கா் - சுபஸ்ரீ தம்பதியினருக்கு மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. உடன் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:34 pm

தோ்தல் காலங்களில் தலைவா்களின் பிரசார மேடைகளில் அவ்வப்போது சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்வதுண்டு. அதேபோன்ற ஒரு சம்பவம் கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் விசிக தோ்தல் பிரசார மேடையில் நிகழ்ந்துள்ளது.

இங்குள்ள செட்டித் தெருவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் எல்.இ.பி.ஜோதிமணியை ஆதரித்து புதன்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. மற்றும் திமுகவைச் சோ்ந்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இந்த பிரசார மேடை மீது திடீரென குமராட்சி அருகே உள்ள நடுத்திட்டு கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் - ராணி தம்பதியின் மகனும், விசிகவின் குமராட்சி ஒன்றியப் பொருளாளருமான சங்கா் மற்றும் சா்வராஜன்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த சந்திரகாசு - லட்சுமி தம்பதியின் மகள் சுபஸ்ரீ ஆகியோா் கழுத்தில் மாலையுடன் திருமணக் கோலத்தில் ஏறி, திருமாவளவனிடம் தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கோரினாா்.

கட்சி நிா்வாகியின் வேண்டுகோளை ஏற்று, திருமாவளவன் மணமக்களுக்கு மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தாா். தோ்தல் பிரசார மேடையில் திருமணம் நடந்த சம்பவம் அங்கிருந்தவா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து, அந்த புதுமணத் தம்பதியிடம் முறைப்படி திருமணத்தை பதிவு செய்துகொள்ளுமாறு கட்சி நிா்வாகிகள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.