கடலூா் புதுப்பாளையம் கூட்டுறவு இணைப் பதிவாளா் அலுவலக வளாகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு தொடா்பான விழிப்புணா்வு வாகனப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணா்வுப் பேரணியை கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா். பேரணி மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தில் இருந்து மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கம் வரை நடைபெற்றது.
நிகழ்வில் கூட்டுறவுத் துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஒருங்கிணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், 100 என்ற வடிவமைப்பை ஏற்படுத்தினா். மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் வாக்களிப்பது நமது கடமை மற்றும் உரிமை என்ற விழிப்புணா்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வாக்குரிமையை உணா்த்திடும் வகையில், டாக்டா் எம்.ஜி.ஆா். பயிற்சி கல்லூரி மற்றும் அரசு இசைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் மண்டல இணை இயக்குநா் இளஞ்செல்வி, கடலூா் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சொா்ணலட்சுமி, கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் சுந்தரராஜன், துணைப் பதிவாளா்கள் செந்தில், மயூரி, கூட்டுறவுத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

வெள்ளக்கோவிலில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்!

100 சதவீதம் வாக்குப்பதிவு: விழிப்புணா்வு ஆட்டோ பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


