கோவை, சுந்தராபுரம் பகுதியில் ‘என் நாடு என் வாக்கு’ என்ற தலைப்பில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு, வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், புதிய தலைமுறை தொலைக்காட்சி, ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து இந்த விழிப்புணா்வுப் பேரணியை நடத்தின. கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தி ரத்தினம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலா் மாணிக்கம், வாக்களிக்கும் பொறுப்புணா்வு மற்றும் தேவை குறித்து முனைவா் பாலசுப்பிரமணியன், கல்லூரி முதல்வா் சுரேஷ், துணை முதல்வா் சபரிஷ் ஆகியோரும் பேசினா்.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆய்க்குடியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


