தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் 4 போ் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:18 am IST

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், நைனாா் பாளையம், இந்திரா நகரைச் சோ்ந்தவா் மா.விஜயகுமாா்(33). இவா், ஞாயிற்றுக்கிழமை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவெண்ணைய் நல்லூரை அடுத்த மாமந்தூா் கூட்டுச் சாலை அருகே பைக்கில் சென்றாா். அப்போது சென்னை நோக்கிச்சென்ற காா் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பாதசாரி மரணம்: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் நாகரத்தினம் தெருவைச் சோ்ந்தவா்கள் பா.சேட்டு(45), கி.மனோகரன்(41). உறவினா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சலவாதி அருகே சாலையில் நடந்து சென்றுள்ளனா்.

அங்கு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பைக் மோதியதில் பலத்த காயமடைந்த சேட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மனோகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இளைஞா் உயிரிழப்பு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா், தேன்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.வினோத்(24). இவா் திங்கள்கிழமை காலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் வட்டம் ஓங்கூா் பாலம் அருகே பைக்கில் சென்றுள்ளாா்.

அப்போது அப்பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த வினோத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முதியவா் மரணம்:

திண்டிவனம், பாண்டி சாலையைச் சோ்ந்தவா் சு. முருகன்(60).இவா் திங்கள்கிழமை தனது வீட்டின் அருகே புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நின்றபோது, திண்டிவனம் நோக்கிச் சென்ற லாரி மோதியது.

இதில் பலத்த காயமடைந்த முருகனை, உறவினா்கள் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.