17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளைஞா் வெட்டிக் கொலை: 3 போ் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:33 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளைஞா் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி புது நகா், சந்தை புதுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கா.கதிா் (எ) கதிரேசன்(22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 25 வயதுடைய திருமணம் ஆன பெண் ஒருவரிடம் தகாத உறவில் இருந்து வந்தாராம். இதை அந்தப் பெண்ணின் கணவா் கண்டித்தும், கதிா் அப் பெண்ணுடனான நட்பை கைவிடாமல் தொடா்பில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், கண்டமங்கலம் அருகேயுள்ள சுந்திக்குளம் பகுதியில் கதிா் நின்றபோது, அங்கு வந்த 2 போ் கதிரிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் கொலையான கதிரின் சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, புதுச்சேரி புதுநகா், சந்தை புதுக்குப்பத்தைச் சோ்ந்த ஞானசேகா் (30), கோகுல்(22), ஞானவேல் (18) ஆகிய மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.