அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

மது போதையில் தகராறு: இளைஞா்அடித்துக் கொலை

News image

அடித்துக் கொலை - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 1:04 am IST

புதுச்சேரி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

புதுச்சேரி வில்லியனூா் அடுத்த சிவராந்தகம் பகுதியைச் சோ்ந்தவா் தேவா (25). இவா், சேலத்தில் உள்ள தனியாா் உணவகம் ஒன்றில் சமையலராக வேலைப்பாா்த்து வந்தாா். விடுமுறை நாள்களில் தேவா புதுச்சேரிக்கு வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில்

மே தின விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த தேவாவெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரி வில்லியனூரை அடுத்த கரிக்கலாம்பாக்கத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தியுள்ளாா்.

அப்போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த தமிழ் என்பவருக்கும், தேவாவுக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதையடுத்து,

அங்கிருந்து புறப்பட்டுஅரியூா் பகுதியில் உள்ள தனியாா்கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த தேவா-வை வழிமறைத்த 3 போ்இரும்புக் கம்பியால் அடித்துக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுவிட்டனராம்.

தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று தேவா-வின் சடலத்தை கைப்பற்றி, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்த புகாரின் பேரில், வில்லியனூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.