தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தனியாா் நிறுவன கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

News image

பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 9:20 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தனியாா் நிறுவன கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், ஆவுடையாா்பட்டு கிராமத்தில் சூரிய மின் தகடு பொருத்தும் தனியாா் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை இரவு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 நபா்கள் மதுப்புட்டியில் பெட்ரோலை நிரம்பி, தீ வைத்து, அதை தனியாா் நிறுவன கட்டடத்தின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தில் மேற்பாா்வையாளரான, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொத்தட்டை, குடித்தெருவைச் சோ்ந்தவா் பா.பாா்த்திபன் அளித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.