ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேனின் ஆடம்பர இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆல்ட்மேனைக் கொல்ல இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் இதில் யாருக்கு காயம் ஏற்படவில்லை.
பெட்ரோல் குண்டு வீசிய 20 வயதான டேனியல் மோரேனோ-காமா என்ற நபர் கைது செய்யப்பட்டு அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு)-க்கு எதிரான ஆவணங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
"அரசியல், தொழில்நுட்பம் அல்லது வேறு எந்த விஷயமாக இருந்தாலும் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்த வன்முறை ஒரு வழியாகாது. சொத்துக்களை சேதப்படுத்தியது, உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய இந்தக் குற்றச்சாட்டு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தலைமை வழக்குரைஞர் டோட் பிளாங்க் தெரிவித்துள்ளார்.
சாம் ஆல்ட்மேன் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசிய குற்றவாளி பின்னர் அங்கிருந்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமையகத்திற்குச் சென்று அங்குள்ள கண்ணாடி கதவுகளை உடைக்க முயன்றுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தில் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் முதலீட்டாளர்களைக் கொல்வது பற்றியும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிராக அமெரிக்காவில் சமீபகாலத்தில் நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல் இதுவாகும்.
ஏஐ தொழில்நுட்பத்துக்கு எதிராக அமெரிக்காவில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. இந்தத் தொழில்நுட்பத்தால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து வருவதால் இது சமூகத்துக்கு அச்சுறுத்தல் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு தன்னுடைய வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன், “அடுத்தமுறை எங்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுபவரை இது தடுக்கும் என்ற நம்பிக்கையில் இதனைப் பகிர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
”தொழில்நுட்பத்துக்கு எதிரான உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். எல்லா நேரத்திலும் ஒருவருக்கு தொழில்நுட்பம் நல்ல விதத்தில் இருப்பதில்லை.
ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி உங்கள் குடும்பம் மற்றும் என் குடும்பத்தின் எதிர்காலத்தை நம்பமுடியாத அளவிற்குச் சிறந்ததாக மாற்றும் என நான் நம்புகிறேன்” என்றும் பதிவிட்டுள்ளார்.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் மதிப்பு கடந்த மாதம் 71 லட்சம் கோடியாக (இந்திய மதிப்பில்) கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Man who allegedly threw a Molotov cocktail at Sam Altman's luxury California home was trying to kill him.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது

வந்தவாசி தொகுதி தவெக வேட்பாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

காா்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

