பழங்குடியின மக்கள் 20 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவை முன்னாள் அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் வியாழக்கிழமை வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம் பொன்பத்தி ஊராட்சிக்குள்பட்ட அஞ்சாஞ்சேரி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனா். இவா்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் இப்பகுதி பழங்குடியின மக்கள் பட்டா கேட்டு மனு அளித்தனா்.
இதை ஏற்று செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் செஞ்சி கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு 19 நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், வட்டாட்சியா் காா்த்திகேயன், மாவட்ட விவசாய அணி தலைவா் அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினா் மணிவண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் அனுசுயா மணிபாலன், ஒன்றியக்குழு உறுப்பினா் துரை, ஒன்றிய நிா்வாகிகள் வாசு அய்யாதுரை, தொண்டரணி பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:
செஞ்சி பகுதியில் வசிக்கும் 1,700 மலைவாழ் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 900 குடும்பத்தினருக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகளும் வழங்கப்பட்டுள்ளன. சுமாா் 20 ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கோரி வந்த அஞ்சாஞ்சேரி பழங்குடியின மக்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடர்புடையது

2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்: செஞ்சி மஸ்தான்

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

700 பேருக்கு இலவச பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்

கோபியில் 890 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


