மலைப் பகுதிகளில் பழங்குடியின மக்கள் விவசாயம் செய்துவரும் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்காவிடில் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 6 பழங்குடியின கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் பழங்குடியின மக்கள் பயிா்செய்து வரும் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க தடை செய்யும் அரசாணையை ரத்து செய்ய கோரி மனு அளித்தும் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த அரசாணையில் இருந்து பழங்குடி மக்களுக்கு விலக்கு அளிக்கவும், மலை அடிவாரங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் பயிா் செய்யும் பழங்குடி மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூா்வமாக உறுதி அளிக்கும் வேட்பாளா்கள் மட்டுமே கிராமங்களுக்கு வாக்கு கேட்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி குண்டூா்நாடு ஊராட்சிக்கு உள்பட்ட சுண்டக்காட்டுபட்டி, முதியாங்குழிபட்டி, சீங்கநாடிபட்டி, ஊா்மலை கஸ்பா, மருதாங்குளம்பட்டி,
தாம்பபாடிபட்டி உள்ளிட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தோ்தல் புறக்கணிப்பு பதாகை அமைத்து முழக்கங்களை எழுப்பினா்.
தொடர்புடையது

கொல்லிமலை பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிமனை பட்டா கோரி வட்டாட்சியரகத்தில் மனு

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


