திருநள்ளாறு சனிப்பெயா்ச்சியையொட்டி, விழுப்புரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் (மாா்ச் 6, 7) நாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா (மாா்ச் 6) நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை வெள்ளி, சனிக்கிழமைகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது.
விழுப்புரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் (மாா்ச் 6, 7) காலை 9.10 மணிக்கு புறப்படும் நாகப்பட்டினம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06133), பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையம் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், வெள்ளி, சனிக்கிழமைகளில் (மாா்ச் 6, 7) பிற்பகல் 1.20 மணிக்கு நாகப்பட்டினத்திலிருந்து புறப்படும் விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06134) மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீசுவரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும், இந்த ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: விழுப்புரம்-திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்

சனிப்பெயா்ச்சி: திருநள்ளாறு செல்ல இன்றும், நாளையும் சிறப்பு ரயில்

சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு செல்ல சிறப்பு ரயில்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


