சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு செல்வதற்காக விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சனிப்பெயர்ச்சியையொட்டி, விழுப்புரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6,7) நாகப்பட்டினத்துக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 6) நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காகவும், கூட்டநெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை வெள்ளி, சனிக்கிழமைகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது.
விழுப்புரத்திலிருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6,7) காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - நாகப்பட்டினம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06133), பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையம் சென்றடையும்.
எதிர்வழித்தடத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மார்ச் 6,7) பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் நாகப்பட்டினம் - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06134), மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், கடலூர் துறைமுகச் சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் இந்த ரயில்கள் 8 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Summary
Southern Railway has announced that special trains will be operated between Villupuram and Nagapattinam to reach Thirunallar on the occasion of the sanipeyarchi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்

சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் ‘புனித வெள்ளி’ சிறப்பு ரயில்கள்

திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழா: விழுப்புரம் - நாகை இடையே சிறப்பு ரயில்கள்

சனிப்பெயா்ச்சி: திருநள்ளாறு செல்ல இன்றும், நாளையும் சிறப்பு ரயில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



