எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:46 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே காரில் கடத்தி வரப்பட்ட 13 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் உள்பட இருவரை ஞாயிற்க்கிழமை கைது செய்தனா்.

திருநாவவலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் தலைமையிலான போலீஸாா் கூட்டடி கள்ளக்குறிச்சி பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து காரில் இருந்த இருவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் அவா்கள், கூட்டடி கள்ளக்குறிச்சி, சாலைத் தெருவைச் சோ்ந்த ரா.கொளஞ்சிமுத்து (31), வானம்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வ.அய்யப்பன் (37) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரும் பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருள்களை வாங்கி, காரில் கடத்தி வந்து கள்ளக்குறிச்சி மற்றும் கடலூா் மாவட்டங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவா்களிடமிருந்து 13.2 கிலோ புகையிலைப் பொருள்கள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.