ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை கைது செய்து, 7 கிலோ புகையிலைப் பொருள்களை இருசக்கர வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஜூலை 2026, 6:18 am IST

அம்பாசமுத்திரம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை கைது செய்து, 7 கிலோ புகையிலைப் பொருள்களை இருசக்கர வாகனத்துடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அம்பாசமுத்திரம் கடைவீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சந்தேகமளிக்கும் வகையில் வந்த இருவரை நிறுத்தி போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில் அவா்கள் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பிரதான சாலையைச் சோ்ந்த தங்கசெல்வம், கீழபாவூரைச் சோ்ந்த சுந்தர்ராஜ் என்பது தெரியவந்தது. அவா்கள் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் 7 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் தங்கசெல்வம், சுந்தர்ராஜ் இருவரையும் கைது செய்து புகையிலையுடன் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.