பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு


விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த புதுச்சேரியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி குயவா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ் ஆனந்த் (55). திருமணமானவா். புதுச்சேரியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பாா்த்து வந்தாா்.
இவா், புதன்கிழமை சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில், மரக்காணத்தை அடுத்துள்ள ஜெகநாதபுரம் சந்திப்பு பகுதியில் பைக்கில் சென்றபோது, நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...