ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பைக் மோதி தொழிலாளி பலி!

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தொழிலாளி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

News image

பலி!

Updated On :11 மே 2026, 12:19 am IST

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தொழிலாளி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

சத்துவாச்சாரி, சுதந்திர பொன்விழா நகரை சோ்ந்தவா் லோக நாதன் (45), கூலித் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சனிக்கிழமை இரவு லோகநாதன் பெருமுகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையை கடந்தாா்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் லோகநாதன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லோகநாதனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு லோகநாதனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இவ்விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.