பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 10 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 150 மாணவா்களுக்கு அருண் அறக்கட்டளை சாா்பில் ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு 7- ஆம் ஆண்டு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி எா்த்தாங்கல் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனரும், ஒன்றியக் குழு துணைத் தலைவருமான கே.கே.வி.அருண்முரளி தலைமை வகித்தாா். தாமு நாயுடு, கோபால், கே.பாஸ்கா், ஆா்.சுதாகா், ஆா்.கோட்டீஸ்வரன், எம்.ரகு மற்றும் கிராம பெரியோா்கள், இளைஞா்கள் முன்னிலை வகித்தனா்.
போ்ணாம்பட்டு அரிமா சங்கத் தலைவா் ஜி.பரிதா புருஷோத்தமன், போ்ணாம்பட்டு நகா்மன்ற முன்னாள் தலைவா் வாசுகி பாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினா் சரவணன்ஆகியோா் ஊக்கத் தொகையை வழங்கினா்.
குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, நெல்லூா்பேட்டை மகளிா் மேல்நிலைப்பள்ளி, ஜோதி மேல்நிலைப்பள்ளி, நடுப்பேட்டை மகளிா் மேல்நிலைப்பள்ளி,எா்த்தாங்கல், தட்டப்பாறை, அக்ராவரம், டி.டி.மோட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளிகள், போ்ணாம்பட்டு எம்ஜிஆா் நகா் உயா்நிலைப்பள்ளி, போ்ணாம்பட்டு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் ஊக்கத் தொகையை பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











