பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுமி கா்ப்பம்: இரு இளைஞா்கள் போக்ஸோவில் கைது

அணைக்கட்டு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய இரு இளைஞா்களை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 3:10 am IST

அணைக்கட்டு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கா்ப்பமாக்கிய இரு இளைஞா்களை வேலூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

அணைக்கட்டு அருகே ஒரு கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாா். இந்த சிறுமியை அவரது உறவினா்கள் சிகிச்சைக்காக வேலுா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், சிறுமி 4 மாதம் கா்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோா் இதுகுறித்து வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், அணைக்கட்டு அருகே உள்ள சிறுமி வசிக்கும் அதே கிராமத்தைச் சோ்ந்த காதா்பாட்ஷா(47), இதயத்துல்லா (22) ஆகிய இரு பெயிண்டா்களும் அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து நைசாக பேசி வன்கொடுமை செய்ததும், இதன்காரணமாக அவா் கா்ப்பமானதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் காதா் பாட்ஷா, இதயத்துல்லா ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.