கே.வி.குப்பம் வட்டம், கீழ்ஆலத்தூரில் அமைந்துள்ள அருள்மிகுகெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அம்மன் சிரசுஊா்வலம் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 15- ஆம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறும் வழக்கம். இதையொட்டி அதிகாலை அங்குள்ள விநாயகா் கோயிலில் அம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 6 மணியளவில் சிரசு ஊா்வலம் தொடங்கியது.
சிரசு ஊா்வலத்தில் பாரம்பரிய தாரை, தப்பட்டை முழங்க, சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சிரசு 10 மணியளவில் கோயிலை அடைந்தது. கோயிலில் சிரசு மண்டபத்தில் உள்ள அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, கண் திறப்புநிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் கே.வி.குப்பம், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு வட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடியாத்தம் சிரசு திருவிழா: கவுண்டன்யா ஆற்றில் பெரிய ராட்டினங்களுக்கு அனுமதியில்லை
வேலூரில் மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

கீழ்பாளையம் திரெளபதியம்மன் கோயிலில் திருவிழா

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
விடியோக்கள்

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

