கோவையில் உள்ள மொத்த பெட்ரோல் பங்குகளில் 40 சதம் பிபிசிஎல் நிறுவனத்தைச் சார்ந்தவை. மேலும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து குழாய் மூலம் கோவைக்கு பெட்ரோல், டீசல் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு மாதத்துக்குத் தேவையான எரிபொருளை கோவையில் சேமித்து வைக்க முடியும். மேலும் பிபிசிஎல் குழாய்களின் வழியாகத்தான் ஐஓசி, எச்பிசிஎல் நிறுவனங்களுக்கும் எரிபொருள் வந்து கொண்டிருக்கிறது. இதனால், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. எதிர்பாராத விதமாக ஸ்டிரைக் நடந்தால் கூட அதையும் சமாளிக்கும் வகையில், எண்ணெய் நிறுவனங்களிடம் லாரிகள் இருக்கின்றன. செம்மொழி மாநாட்டையொட்டி அனைத்து பெட்ரோல் பங்குகளும் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.