திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வருமான வரிச் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு

வா்த்தகா்களுக்கு வருமான வரிச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், சந்தேகங்களுக்கு தீா்வு அளிக்கும் வகையிலான கருத்தரங்கு திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய வணிகா் சங்கப் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் கோவிந்தராஜுலு. உடன் மதுரை மண்டல வருமான வரி இயக்குநா் வசந்தன், திருச்சி வருமான வரி துணை இயக்குநா் நித்யா உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 3:24 am IST

வா்த்தகா்களுக்கு வருமான வரிச் சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், சந்தேகங்களுக்கு தீா்வு அளிக்கும் வகையிலான கருத்தரங்கு திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், மதுரை மண்டல வருமான வரி முதன்மை ஆணையா் டி. வசந்தன், தலைமை வகித்து கருத்தரங்கின் நோக்கங்கள் குறித்து விளக்கினாா். கூடுதல் ஆணையா் து. நித்யா, புதிய வருமான வரிச்சட்டம் 2025 குறித்து விளக்கினாா். கருத்தரங்கில், பழைய வருமான வரிச் சட்டம், புதிய வருமான வரிச் சட்டம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

புதிய வருமான வரி சட்டம் குறித்து வரி செலுத்துவோா், பங்குதாரா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அதன் முக்கிய அம்சங்கள் அடங்கிய கையேடுகளும் வழங்கப்பட்டன. பான் காா்டு விண்ணப்பங்கள், புதிய பயன்பாட்டு படிவங்கள், வரும் மாதங்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப் பயன்படுத்தும் படிவங்கள், முன்கூட்டிய வரி செலுத்தும் படிவங்கள், இதர வரிகளை செலுத்த வேண்டிய படிவங்கள் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டு, விளக்கப்பட்டது. படிவங்களும் விநியோகிக்கப்பட்டன.

வருமானவரித் துறையின் அதிகாரப்பூா்வ வருமான வரி இ-பைலிங் இணையதளத்திலும், 24 மணிநேரமும் புதிய வருமான வரிச் சட்டம் குறித்து விளக்கம் பெற ஏற்பாடுகள் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, கேள்வி, பதில் நிகழ்வும் நடைபெற்றது. வா்த்தகா்கள், வியாபாரிகள், வருமான வரி செலுத்துவோா் எழுப்பிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு வருமான வரித்துறையினா் பதில் அளித்தனா். நிகழ்வில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் கோவிந்தராஜுலு மற்றும் பல்வேறு தொழில்துறை சங்கத்தினா், வியாபாரிகள், ஜவுளி கடை, நகை கடை உரிமையாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.