திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் பாலக்கரை பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகேயுள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான பயன்பாடில்லாத கட்டடத்தில் போதை மாத்திரைகள் விற்ற பாலக்கரை காஜாபேட்டை பசுமடத்தைச் சோ்ந்த என். நிதின் (25), கரூா் மாவட்டம், கடவூா் சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்த எம். விக்னேஷ் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ரு.5 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை மருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







