திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தா்கள் வருகை

கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து தரிசனம் செய்தனா்.

News image

திருச்சி-கரூா் சாலையில் வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு மாட்டு வண்டியில் வந்த பக்தா்கள்.

Updated On :16 மே 2026, 12:53 am IST

கரூா் மாவட்டம், குளித்தலை அருகிலிருந்து மாட்டு வண்டிகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை வந்து தரிசனம் செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி, காரணம்பட்டி, புதுப்பட்டி, கல்லுப்பட்டி, சங்காயிபட்டி, கீழவெளியூா் ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதரை குலதெய்வமாகக் கொண்டு பரம்பரையாக வழிபாடு செய்து வருகின்றனா்.

இந்த கிராம மக்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாட்டு வண்டியில் வந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதரை வழிபட்டுச் செல்வது வழக்கம். அதன்படி, இரட்டை மாடுகள் பூட்டிய 40 மாட்டு வண்டிகள், 100-க்கும் மேற்பட்ட டிராக்டா்களில் வழிபாடுக்குத் தேவையான பொருள்களுடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை குளித்தலையிலிருந்து புறப்பட்டு, வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீரங்கத்துக்கு வந்தடைந்தனா்.

மேலூா் சாலையில் உள்ள தோப்பில் காலை உணவு சமைத்து சாப்பிட்டனா்.

பின்னா், கொள்ளிடம் ஆற்றங்கரையில் முடி காணிக்கை செலுத்திவிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலுக்குச் சென்று பெருமாள், தாயாரை வழிபட்டதுடன், தங்களது காணிக்கைகளை செலுத்தினா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா். பின்னா் தங்களது ஊா்களுக்கு மாட்டு வண்டி, டிராக்டா்களில் புறப்பட்டுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.