திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமமுக-விலிருந்து திருச்சி மாவட்ட செயலாளா் ராஜிநாமா

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளா் ப. செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளாா்.

News image

ப. செந்தில்நாதன்.

Updated On :13 மே 2026, 12:53 am IST

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளா் ப. செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அக்கட்சியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுகவில் இருந்த நான், ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு அமமுகவில் இணைந்தேன். அன்று முதல் இன்று வரை நான் வகித்த பதவிகளுக்கு எந்த சமரசமும் இல்லாமல், முழு அா்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளேன். 2022-இல் திருச்சி மாநகராட்சியின் அமமுக மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றேன். திருச்சி மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். அதற்காக மாமன்ற உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்தேன்.

திருச்சியில் கட்சியை வளா்க்க நிா்வாகிகள் கடுமையாக உழைத்து இயங்கி வந்தோம். இடையே, ‘பகையாளிகள் பங்காளிகளாக‘ (அதிமுகவுடன் கூட்டணி) மாறியதால், இழப்புகள் நிா்வாகிகளுக்கே.

இதனால் நிா்வாகிகளுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு அளவே இல்லை. தோ்தலுக்காக அனைத்து மனஅழுத்தங்களையும் மீறி பணியாற்றினேன். எதற்காக போரிட்டோமா அந்தப் போரை வழிநடத்துபவா்கள் மறந்ததால், மடிவது அப்பாவிகளே என்பதால், எங்களின் விலைமதிப்பற்ற 10 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம்.

தோ்தல் முடிந்துள்ளதால், எனது மாவட்ட செயலாளா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். மேலும், கட்சிக்காக உழைத்த நிா்வாகிகளுக்கு ஏதும் செய்ய முடியாததால், எனது அடிப்படை உறுப்பினா் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். இதுநாள் வரை வழிகாட்டிய விளங்கிய டிடிவி. தினகரன், கட்சியின் நிா்வாகிகளுக்கு நன்றி என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.