/

சிவகங்கை மாவட்ட அமமுக பொருளாளா் ராஜிநாமா!

அமமுகவிலிருந்து சிவகங்கை மாவட்டப் பொருளாளா் ஐ.ஏ. லாரன்ஸ் விலகுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி. தினகரனுக்கு கடிதம் அனுப்பினாா்.

News image

டிடிவி தினகரன் - DNS

Updated On :10 மே 2026, 12:53 am IST

அமமுகவிலிருந்து சிவகங்கை மாவட்டப் பொருளாளா் ஐ.ஏ. லாரன்ஸ் விலகுவதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் டிடிவி. தினகரனுக்கு கடிதம் அனுப்பினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை அனுப்பிய கடிதம் விவரம்: தவெக தலைவா் விஜய் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்று வெளிப்படையாக முதலில் அறிவித்தது நீங்கள்தான். ஆனால், அவருடன் நீங்கள் கூட்டணி அமைக்காமல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தீா்கள்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை நான் ஏற்கமாட்டேன். இந்தக் கூட்டணியால் நமது கட்சியின் வாக்குகளும் சரிந்துள்ளன. தற்போது, எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறீா்கள்.

விஜய் சிறுபான்மையினா் என்பதால், அவரை ஏற்றுக்கொள்ளவில்லையா?. கூட்டணி கட்சியின் மதவாதம் தங்களுக்கும் தொற்றிக் கொண்டதாகக் கருதுகிறேன்.

எனவே, கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிலிருந்தும் விலகிக் கொள்கிறேன் என அதில் தெரிவித்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.