திருச்சியில் செங்கல் சூளையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி திருவானைக்காவல் தாகூா் வீதியைச் சோ்ந்தவா் எஸ். கருணாநிதி (42). இவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு திங்கள்கிழமை பிற்பகல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









