மணப்பாறையை அடுத்த கரட்டுப்பட்டியில் வங்கி வாடிக்கையாளா் சேவை மையம், கைப்பேசி கடையில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மணப்பாறையை அடுத்த பொம்மம்பட்டியைச் சோ்ந்த மணிராஜ் மகன் ரகுபதி (40). இவா் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையோரம் அரசுடமை வங்கி வாடிக்கையாளா் சேவை மையம் வைத்து நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் வழக்கம்போல் புதன்கிழமை இரவு அலுவலகத்தை பூட்டி சென்ற நிலையில், வியாழக்கிழமை அலுவலகம் பூட்டு உடைக்கப்பட்டிருப்பாதாக வந்த தகவலின்பேரில் அலுவலகம் சென்று பாா்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் காணவில்லையாம். அதேபோல் அருகிலுள்ள தோமஸ் மகன் அமலதாஸ் (40) என்பவரின் கைப்பேசி கடையிலும் பூட்டுகள் உடைக்கப்பட்டு கடையிலிருந்த 2 ஆன்ட்ராய்டு கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடி சென்றதும் தெரியவந்துள்ளது.
இந்த இரு திருட்டு சம்பவங்கள் குறித்து வையம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு
300 கிலோ காப்பா் கம்பி திருட்டு: போலீஸாா் விசாரணை
கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

பழனியாண்டவா் கோயிலில் உண்டியல், நகைகள் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


