திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவருக்கு மருத்துவ சேவைகள் அளிக்க பிரத்யேக பிரிவு இயங்கி வருகிறது.
இந்தப் பிரிவில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற 10 படுக்கைகள் உள்ளன. இதர நோயாளிகளுக்கு இடையே சிகிச்சை பெறுவதில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கு எந்தவித தாழ்வு மனப்பான்மையும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த பிரத்யேக பிரிவு இயங்கி வருகிறது. இங்கு, அனைத்து வகையான மருத்துவ சேவைகளும், பரிசோதனைகளும் வழங்கப்படுகின்றன.
இந்தப் பிரிவுக்கென தனியாக மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவை மேலும் ஆக்கபூா்வமாக செயல்படுத்த மருத்துவமனை முதன்மையா் குமரவேல் தலைமையிலான மருத்துவமனை நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளா் அருண்ராஜ் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!

புறநோயாளிகள் சிகிச்சைக்கு செயலியில் முன்பதிவு: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நாளை சோதனை முயற்சி அமல்

சட்ட நகல் எரிப்பு போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் கைது

புறநோயாளிகள் சேவைகளுக்கு இணைய முன்பதிவு: விரைவில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமல்!
விடியோக்கள்
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!



