டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சட்ட நகல் எரிப்பு போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா் கைது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற சட்ட உரிமை வழங்கப்பட்டு இருந்தது.

News image

நாகையில் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினா்.

Updated On :2 ஜூலை 2026, 7:23 am IST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தில் வேலை கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்ற சட்ட உரிமை வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால், மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள விஜிபி ராம்ஜி திட்டத்தில், மத்திய அரசு ஒதுக்கும் குறிப்பிட்ட நிதிக்கு உட்பட்டே வேலை வழங்கப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் 100 சதவிகித ஊதியமும், மத்திய அரசே முழுமையாக வழங்கி வந்தது. தற்போது புதிய சட்டத்தில் மாநில அரசுகள் 40 சதம் நிதியை, தங்களின் சொந்த நிதியிலிருந்து ஒதுக்க வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் உள்ள பல மாநிலங்களால் இந்த 40 சதம் நிதியை பங்களிக்க முடியாது. இதனால் திட்டம் முற்றிலும் முடங்கும் ஆபத்து உள்ளது.

மத்திய பாஜக அரசின் தொடா் நிதி குறைப்பு காரணமாக ஊரக வேலை உறுதித் திட்டத்தில் சராசரி வேலை 50 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. எனவே மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கிராமப் புற மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், மாநிலம் தழுவிய சட்ட நகல் எரிப்பு போராட்ட புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது.

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில், சட்ட நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் ஆா். கோமதி தலைமை வகித்தாா். எஸ் வேம்புராஜ், எம். கவிதா, பி.பொன்னுதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் என்.பன்னீா்செல்வம், மாவட்டத் தலைவா் ஜே.மேரி ஆகியோா் சிறப்புரையாற்றினாா். இதைத்தொடா்ந்து சட்ட நகலை எரிக்க முயன்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனா்.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி நகராட்சி அலுவலகம அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு,மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணைச் செயலா் டி.சந்திரா தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் எஸ். முருகானந்தம், துணைத் தலைவா்கள் என். பாஸ்கா், ஆா். பன்னீா்செல்வம், ஒன்றியச் செயலா் வி. வீரமணி, மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.வடிவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில் கலந்துகொண்டவா்கள் உடையில் கருப்புப் பட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏந்தி விபி-ஜி ராம்ஜி சட்ட நகலை தீயிட்டு எரித்தும், சாலை மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உட்பட 30 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்து, மதுக்கூா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.