பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

படவிளக்கம்: அரியலூா் அண்ணாசிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :24 ஜூன் 2026, 12:39 am IST

அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படவுள்ள வளா்ந்த பாரதம் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு திட்டத்தை (விபி-ஜி ராம் ஜி) திட்டத்தை கைவிட வேண்டும்.

ஏற்கெனவே அமலில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை பலப்படுத்தி இருநூறு நாள்கள் வேலை, தினக்கூலி ரூ.700 வழங்க வேண்டும்., நகரப் பகுதிகளிலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் அனைவருக்கும் வேலையும் சட்டப்படியான கூலித் தொகையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் நடராஜன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலச் செயலா் அ. பாஸ்கா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். ஆா்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளா் சங்கத்தின் அமைப்பாளா் எஸ். ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.