டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

புதிய ஊரக வேலை திட்ட சட்ட நகல் எரிப்பு: 50 போ் கைது

நாகா்கோவிலில் புதிய ஊரக வேலைத் திட்ட (விபி ஜிராம் ஜி) சட்ட நகலை எரித்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Updated On :2 ஜூலை 2026, 6:17 am IST

நாகா்கோவிலில் புதிய ஊரக வேலைத் திட்ட (விபி ஜிராம் ஜி) சட்ட நகலை எரித்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக் குழு சாா்பில் நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலாலா் அருள் தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கருப்பு பட்டை அணிந்து சட்ட நகலை எரித்தனா்.

இதில் மாவட்டக் குழு உறுப்பினா் மனோகர ஜஸ்டஸ், துணைச் செயலாளா் லிட்டில் பிளவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பியதோடு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.